Friday, October 18, 2013

புத்தகப் பாவை




கண்கள் காணும்வரை
கவிஞன் நானுமில்லை !
கண்ணில் பட்டுவிட்டாய்
கற்பனைக் கேதெல்லை !!

காகம் கரைந்தாலும்
கவிநூறு தோணுதடி !
காகித பாலையெல்லாம்
கவிச்சோலை ஆகுதடி !!

மீனெனும் விழிகளில்லை
தேனெனும் குரலுமில்லை...
ஊனெனக் கலந்து விட்டாய்
உன்னைவிட அழகியில்லை !


பாவை கடக்கும்வரை
பாதை எனக்குமில்லை
பூவைப் பார்த்தவண்டின்
பயணம் முடிவதில்லை !

சித்தத்தில் கலந்துவிட்டாய்
சிறுமனம் பறித்துவிட்டாய்
புத்தகப் புதுப்பெண்ணே
புத்தியில் நிறைத்தேனே !

காதல் பாவைகண்டால்
காளையர் பித்தராவார் !
பேதையும் அறிஞராவார் – நல்
புத்தகப் பாவையாலே !

பாண்டூ,
மிழ்நாடு லை லக்கியப் பெருமன்றம்,
6 ஜவுளிக்கடை வீதி, சிவகாசி – 626123.
செல் : 9843610020

5 comments:

  1. அழகிய நடை... எளிமையான வரிகள்....

    சிவகாசியிலிருந்து ஒரு கவிதை சரவெடியா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    கவிதையின் வரிகள் அழகு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி தோழர்

      Delete
    2. வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி

      Delete