Wednesday, August 14, 2013

சுதந்திர சிறகுகள்



 (11 ஆகஸ்ட் 2013 தினமலர்-வாரமலர் இதழில் வெளியான கவிதை)

நம் சிறகுகள்...
பிறர் பறப்பதற்கா ?

நம் சுதந்திரம்...
பிறர் ஆள்வதற்கா ?

சிறுவர்களே!
வசந்தச் சிறகுகள்...
திரை அரங்கிலே தொலைத்திடவோ ?

இளைஞர்களே!
சிந்தனைச் சிறகுகள்...
காதல் சிறையிலே பூட்டிடவோ ?

தாய்மார்களே!
கூர்மதிச் சிறகுகள்...
சின்னத்திரைச் சீரியலிலே  சிதைத்திடவோ ?

வாக்காளர்களே!
வாக்குச் சிறகுகள்...
அரசியல்வாதியிடம் வாடகைக்கு விட்டிடவோ ?

பாட்டாளித் தோழரே!
உழைப்புச் சிறகுகள்...
பணமுதலையிடம் அடகு வைத்திடவோ ?

பட்டதாரிகளே!
திறமைச் சிறகுகள்...
பன்னாட்டு திமிங்கலத்திடம் பறிகொடுத்திடவோ ?

இன்னும் ! இன்னும் !
உதிர்ந்திட்ட நம் சிறகுகளோ...
ஏராளம் ! ஏராளம் !

இனியாவது...
பெற்ற சுதந்திரத்திற்கான இனிப்போடு...
பெற வேண்டிய சுதந்திரத்திற்கான
கண்ணீரையும் பிரசவிப்போம் !

உயரட்டும்
தேசியக் கொடியோடு
நமது சிறகுகளும்...
சுதந்திரமாய் !!
-     பாண்டூ
-     த.க.இ.பெருமன்றம்
-     6 ஜவுளிக்கடை வீதி
-     சிவகாசி – 626123
-     9843610020

4 comments:

  1. வணக்கம்
    கவிதை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது சரிதான் உங்கள் வலைப்பக்கம் வருவது இதுதான் முதல்த்தடவை நேரம் மின்சாரம் இருந்தால் வாருங்கள் நம்ம பக்கமும்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஆழமான கருத்துக்களுடன் கவிதை அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேல் முருகன் சார்!

      Delete